முஸ்தபிசுர் ரஹ்மானாக களமிறங்கும் தமிழக வீரர் நடராஜன்..சாதிப்பாரா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு வங்கதேசத்தைச் முஸ்தபிசுர் ரஹ்மான் கிடைத்துவிட்டார் என்று கூறப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இன்று ஐபிஎல் போட்டியில் களமிறங்க இருப்பது முன்னணி வீரர்கள் உட்பட கிரிக்கெட் ரசிர்கர்கள் பலருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல்-லில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதல் போட்டியில் இந்தூரில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும், ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல்-லில் சொதப்பி வரும் பஞ்சாப் அணி தற்போது மேக்ஸ்வல்ஸ் தலைமையில் களமிறங்க இருக்கிறது.

இம்முறை சேவக்கின் ஆலோசனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெலுடன் டேவிட் மில்லர், மோர்கன் ஆகியோர் அதிரடி வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.

ஸ்டோனிஸ் ஆல்ரவுண்டராக உள்ளார், ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி TNPL -இல் முன்னணி வீரர்களின் கவனத்தை தன் பக்க இழுத்த தமிழகத்தை சேர்ந்த இளம் வேகப் பந்து வீச்சாளரான நடராஜன் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

TNPL-லீக்கின் போது நடராஜனின் பந்துவீச்சு வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் போன்று இருக்கிறது என ஹைடன் உட்பட பல முன்னணி வீரர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments