மலிங்க ஹெட்ரிக் வீண்! இலங்கையை ஊதி தள்ளியது வங்கதேசம்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை-வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டியிவல் வங்கதேச அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளது.

இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரும் 1-1 என சமனில் முடிவடைந்தது. முன்னதாக, இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரும் 1-1 என சமனில் முடிவடைந்தது நினைவுக் கூரதக்கது.

கொழும்பில் நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

19வது ஓவரை வீசி இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்க, முஷ்பிகுர் ரஹீம், மொட்டர்ஷா மற்றும் மெஹிதின் ஹசன் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.

இந்நிலையில் 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 18 ஓவர்களில் 131 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் சாமர கபுகெதர 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். வங்கதேச அணி சார்பில் பந்துவீச்சில் முஸ்தபிசூர் ரஹ்மான் 4 விக்கட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments