டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் ஓய்வு: திடீர் அறிவிப்பு

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி வீரரான மிஸ்பா உல் ஹக் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த மிஸ்பா உல் ஹக், தலைவராக இருந்து பல்வேறு வெற்றிகளை பாகிஸ்தான் அணிக்கு தேடித்தந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 56 பந்துகளில் அதிவேகம் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

ஆனால் அந்த சாதனையை நியூசிலாந்து வீரர் பிராண்டன் மெக்குல்லம் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் போது 54 பந்துகளில் சதம் அடித்து உடைத்தார்.

இந்நிலையில் மிஸ்பா உல் ஹக் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்துள்ளார்.

வரும் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ்பா தலைமையிலான பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை முற்றிலும் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments