கங்குலி அணியில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள்: ஆல் டைம் பெவரட் என நெகிழ்ச்சி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி தனது ஆல் டைம் பெவரட் அணியை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கை அணியின் இரண்டு முன்னாள் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி, இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார். 44 வயதான சவுரவ்கங்குலி தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.

இந்நிலையில் தனக்கு எப்பவுமே பிடித்த அணி என்று 11 வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு வீரர்களும், இலங்கையைச் சேர்ந்த இரண்டு வீரர்களும், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இரண்டு வீரர்களும், இங்கிலாந்தில் ஒரு வீரரும் இடம் பெற்றுள்ளார்.

இதில் அணிக்கு விக்கெட் கீப்பர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தான் என்று தெரிவித்துள்ளார்.

கங்குலி அணி வீரர்களின் விவரம்

மேத்யூ ஹைடன் (அவுஸ்திரேலியா), அலஸ்டர் குக் (இங்கிலாந்து), ராகுல் டிராவிட் (இந்தியா), சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), காலிஸ் (தென் ஆப்பிரிக்கா), குமார் சங்ககாரா (இலங்கை-விக்கெட் கீப்பர்), முத்தையா முரளிதரன் (இலங்கை), ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா), கிளான் மெக்ரத் (அவுஸ்திரேலியா), டேல் ஸ்டைன் (தென் ஆப்பிரிக்கா), ஷேன் வார்னே (அவுஸ்திரேலியா)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments