சுழலில் வித்தை காட்டிய இந்திய வீரர்! 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அபார சாதனை

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியாவில் இடம்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இடது கை சுழற் பந்து வீச்சாளர் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த 2வது டிவிஷன் லீக் பிளே-ஆப் போட்டியில் மொகமது சாய் என்ற இளம் வீரரே இச்சாதனையை படைத்துள்ளார்.

டால்டாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அரியாடாஹா ஸ்போர்ட்டிங் கிளப்பும், நேஷனல் அத்லெடிக் கிளப்பும் மோதின.

இரண்டு நாள் கொண்ட போட்டியில் நேஷனல் அத்லெடிக் அணிக்கு 137 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

138 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நேஷனல் அத்லெடிக் அணி வீரர்களை, அரியாடாஹா அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான மொகமது சாய் தனது சுழல் வித்தையால் திணறடித்துள்ளார்.

மொகமது சாய் 28 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுக்களையும் சாய்த்துள்ளார். இதன் மூலம் நேஷனல் அத்லெடிக் அணி 99 ஓட்டங்களில் சுருண்டதால் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அரியாடாஹா அணி வெற்றி பெற்றது.

சர்வதேச டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் ஜிம்லேகர், இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments