பவுலிங் வேண்டாமாம்? பேட்டிங்கில் அசத்தும் மலிங்கா

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று விதமான போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட்(1-1) மற்றும் ஒரு நாள் தொடர்(1-1) சமநிலையில் முடிந்ததது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி இன்று இரவு பிரேமடசா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதில் இலங்கை அணி தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளாரான மலிங்கா, பேட்டிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

டி 20 போட்டி என்பதால், பவுலிங் மட்டும் இருந்தால் போதாது, பேட்டிங்கும் வேண்டும் என்பதற்காக மலிங்கா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் ரசிகர்கள் சிலர் சமூகவலைத்தளங்களில் பவுலிங் வேண்டாமா மலிங்கா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments