கோஹ்லி ஒரு சாட்டை மாதிரி..எதிரில் நின்றால்: அவுஸ்திரேலிய வீரர் பளார்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவர் கோஹ்லி ஒரு சாட்டை மாதிரி என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெர்வ் ஹியூஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

இத்தொடரில் இரு அணி வீரர்களும் இதுவரை இல்லாத அளவிற்கு மோதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இது குறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெர்வ் ஹியூஸ் கூறுகையில், இந்திய அணியின் தலைவர் கோஹ்லி, ஒரு சாட்டை மாதிரி, என்றும் அது நம் கையில் இருந்தால் தைரியமாகவும் எதிரில் இருந்தால் எதிரியாகவும் தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments