அவுஸ்திரேலிய அணி குறித்த சர்ச்சை கருத்து: கோஹ்லி திடீர் பல்டி

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியா-அவுஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் பேசிய சர்ச்சை கருத்து குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

போட்டிக்கு பின் பேசிய கோஹ்லி, இனி அவுஸ்திரேலிய வீரர்களுடனான நட்பு முன்பு போல இருக்காது என தெரிவித்திருந்தார்.

கோஹ்லியின் கருத்தை அவுஸ்திரேலிய பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியிட்டன.

இந்நிலையில் இதுகுறித்து கோஹ்லி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், போட்டிக்கு பின் நான் அளித்த பதில் ஒட்டுமொத்தமாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

நான் மொத்த அவுஸ்திரேலிய அணி வீரர்களையும் சொல்லவில்லை. அந்த செயலலில் ஈடுபட்ட ஒரு சிலரையே சொன்னேன்.

பெங்களூரு அணிக்காக விளையாடிய அவுஸ்திரேலிய வீரர்களுடனான நட்பு என்றும் மாறாமல் தொடரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments