நிம்மதியாக உறங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? புலம்பிய ஸ்மித்

Report Print Santhan in கிரிக்கெட்

தர்மசலாவில் உள்ள அவுஸ்திரேலிய அணியினர் அங்குள்ள திபெத் பவுத்தத் துறவி தலாய் லாமாவைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

தலாய் லாமாவை சந்தித்த ஸ்மித் அவரிடம் உயர் அழுத்த டெஸ்ட் போட்டிக்கு முதல் நாள் நிம்மதியாக உறங்குவது எப்படி என்று கேட்டுள்ளார்.

அதன் பின் இது குறித்து கூறுகையில், இது மிக அருமை. நான் அவரிடம் நிம்மதியாக உறங்குவது எப்படி என்றும் அதற்கு அவர் எப்படி எனக்கு உதவ முடியும் என்று கேட்டேதாக கூறினார்.

திபெத் கலாச்சாரத்தின் படி நானும் அவரும் ஒருவரையொருவர் மூக்கால் உரசிக் கொண்டோம், அவர் எனக்கு தன் ஆசிகளை வழங்கினார், இது எனக்கு அடுத்த 5 நாட்களுக்கான நிம்மதியான உறக்கத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இது அணிக்கு எப்படி உதவும் என்பதற்கு, இன்னும் கொஞ்சம் நிம்மதியாக ரிலாக்ஸ் செய்வோம், அவர் கருணை மிக்கவர், ஒவ்வொரு மனிதரையும் நேசிப்பவர். அவரைப்போன்ற ஒருவரிடம் ஆசி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று ஸ்மித் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments