இது எல்லாம் பேசுறதுக்கு தனி தில் வேண்டும்: கோஹ்லியை புகழ்ந்த அவுஸ்திரேலிய வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

மனதில் படும் கருத்துக்களை தெரிவிப்பதற்கு தனி தில் வேண்டும் என்று கோஹ்லியை புகழ்ந்துள்ளார் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக்.

அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இரு அணி வீரர்களும் ஆக்ரோசத்துடன் விளையாடி வருகின்றனர்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கோஹ்லியை அவுஸ்திரேலிய ஊடகங்கள் டிரம்புடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கூறுகையில், கோஹ்லியின் தலைமையில் எனது ஸ்டைலும், பாண்டிங்கும் ஸ்டைலும் கலந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

மேலும் பல விஷயங்களில் அவரின் தனித்துவமே அவருக்கு கைகொடுக்கிறது. மனதில் படும் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் ஒரு தனி தில் வேணும், அது அவரிடம் அளவுக்கு அதிகமாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments