அணித்தலைவராக ஹர்பஜன் சிங் நியமனம்

Report Print Basu in கிரிக்கெட்

தியோதர் கிண்ண தொடருக்கான இந்தியா புளூ அணி அணித்தலைவராக ஹர்பஜன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இந்தியா புளூ அணித்தலைவராக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா புளூ அணி, இந்தியா ரெட் அணி மற்றும் விஜய் ஹசாரே கிண்ணத்தை கைப்பற்றிய தமிழ்நாடு அணி மோதும் தியோதர் கிண்ண தொடர் திர்வரும் 25ம் திகதி முதல் 29ம் திகதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

இதில், மகாராஷ்டிராவை சேர்ந்த Ruturaj Gaikwad இந்தியா புளூ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே சமயம், ஐதராபாத்தை சேர்ந்த CV Milind மற்றும் Sreevats Goswami ஆகியோர் இந்தியா ரெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments