அவுஸ்திரேயாவுக்கு எதிரான டெஸ்டில் கோஹ்லி விலகல்?

Report Print Basu in கிரிக்கெட்

தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ள இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது குறித்து இந்திய அணித்தலைவர் கோஹ்லி பேட்டியளித்துள்ளார்.

ராஞ்சி டெஸ்டின் போது பந்தை பாய்ந்து விழுந்து தடுத்த போது வலது தோள்பட்டையில் காயமடைந்தார் கோஹ்லி. அந்த காயம் இன்னும் முழுமையாக சீராகவில்லை.

நேற்று மைதானத்திற்கு வந்த கோஹ்லி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோஹ்லி கூறியதாவது, நாளை 100 சதவீதம் உடல் தகுதி இருந்தால் மட்டுமே விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

கோஹ்லி நாளை போட்டியில் பங்கேற்பாரா இல்லை என்பது குறித்து இன்று இரவு அல்லது நாளை போட்டி தொடங்கும் முன் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடைசி நேரத்தில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

அவர் தொடர்ந்து விளையாடும் போது காயத்தன்மை மேலும் மோசமடைந்து விடக்கூடாது என்ற கவலையும் அணி நிர்வாகத்துக்கு உள்ளது.

இதை கருத்தில் கொண்டு மும்பையை சேர்ந்த துடுப்பாட்டகாரரான 22 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு கூடுதலாக அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments