இந்திய வீரர்கள் விளையாடும் ஒரு டெஸ்ட் போட்டிக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்திய வீரர்கள் விளையாடும் ஒரு டெஸ்ட் போட்டிக்கான சம்பளத் தொகையை ரூ.15 லட்சமாக பிசிசிஐ நிர்ணயித்துள்ளது. .

1970 களின் ஆரம்பக்காலத்தில் ஒரு டெஸ்ட் போட்டி ஆடுவதற்காக ஒரு வீரருக்கு இந்திய மதிப்பில் 2500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தாக 1970 களின் முடிவில் ரூ.5000மாக உயர்ந்தது. 1980 களின் ஆரம்பக்காலத்தில் 7000 ரூபாயாக இருந்த ஊதியம் இந்திய அணி 1983ல் உலக கோப்பையை வென்றதும் கிரிக்கெட்டின் புகழ் இந்தியாவில் அசுரத்தனாமாக வளரத் தொடங்கியது அது கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கியது.

1980களின் முடிவில் ரூ.7000 லிருந்து இரண்டு மடங்காக உயர்ந்து ரூ.15,000 ஆனது. 1990 களின் ஆரம்பத்தில் ஒரு டெஸ்ட் போட்டி விளையாடுவதற்கான வீரர்களின் சம்பளத்தொகை 25,000 ரூபாயாக மீண்டும் உயர்த்தப்பட்டது.

1990 களின் முடிவில் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் விளம்பரங்களின் பங்குகள் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக வீரர்களின் சம்பளமும் நான்கு மடங்காக உயர்ந்தது, 25,000 ரூபாயிலிருந்து 1 லட்சமாக உயர்ந்தது.

2000 ஆண்டின் ஆரம்ப காலத்தில் வீரர்களின் சம்பளம் 1.5 லட்சமாக உயர்ந்திருந்தது. விளம்பரங்களின் வர்த்தகம் உயர உயர வீரர்களின் சம்பளமும் வளர்ந்தது.

2005 ஆண்டுக்கு மேல் ஒரு டெஸ்ட் போட்டிக்கான சம்பளம் ரூ.5 லட்சமாக இருந்தது. 2010 ஆம் ஆண்டு தொடங்கி இது நாள் வரையில் ஒரு டெஸ்ட் போட்டிக்கான சம்பளம் 7 லட்சம் ரூபாயாக இருந்து வந்தது.

இந்தத் தொகை தற்போது 15 லட்சமாக உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments