இந்திய அணியிலிருந்து விலக்கப்பட்ட பிரபல வீரர்! ஏமாற்றத்தில் ரசிகர்கள்

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரியம் புதிதாக அறிவித்துள்ள ஒப்பந்தப் பட்டியலில் பிரபல வீரரின் பெயர் இடம்பெறாதது சென்னை ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட ஒப்பந்தப் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால், இனி அவர் அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச அணியின் முன்னாள் ரஞ்சி கிண்ணத்திற்கான பயிற்சியாளர் கூறியதவாது, 2015ம் ஆண்டு திருமணம் செய்த ரெய்னா அதன் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தவில்லை.

அவர் பல போட்களில் பங்கேற்கவில்லை. இதனால் தான் தியோதர் கிண்ணத்திற்கான அணிகளிலும் அவர் பெயர் இடம் பெறவில்லை. ரெய்னா இனி இந்திய அணியில் இடம்பிடிப்பது மிக கடினம் என கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்ல பிள்ளையாக திகழ்ந்த ரெய்னா எதிர்வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணித்தலைவராக களமிறங்கவுள்ளார்.

இதில் ரெய்னா சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ரெய்னா இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் இடம்பெறாதது சென்னை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments