இலங்கைக்கு வந்த சாம்பியன் கிண்ணம் : ரசிகர்களுக்கு புகைப்படம் எடுக்க வாய்ப்பு

Report Print Vino in கிரிக்கெட்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி சாம்பியன் கிண்ண தொடர் எதிர்வரும் யூன் மாதம் 1 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

அந்த வகையில் குறித்த தொடருக்கான உத்தியோகப்பூர்வ கிண்ணம் தற்போது இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த கிண்ணத்தினை இலங்கையில் உள்ள ரசிகர்களை கவரும் வண்ணமாக இலங்கையில் பல பக்கங்களுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.

அவ்வாறு மஹரகம, நுகோகொடை, கொழும்பு நகர மண்டபம் வழியாக இறுதியாக பொதுமக்கள் பார்வைக்காக காலிமுகத்திடல் வைக்கப்படவுள்ளது.

இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஸ்லி டி சில்வா மற்றும் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோரால் இன்று பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

மேலும், இதன் போது கிரிக்கெட் ரசிகர்கள் உத்தியோகபூர்வ சம்பியன் கிண்ணத்துடன் பொது மக்களுக்கு புகைப்படமெடுக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளமை ,குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments