இந்திய நடுவரால் தடுமாறிப்போன போட்டி: 12 முடிவில் 4 தான் சரி

Report Print Vino in கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டியின் போது நடுவர் வழங்கும் தீர்ப்பு சிலவேளைகளில் பிழைகள் ஏற்படும் பட்சத்தில் டி.ஆர்.எஸ் நடவடிக்கை மூலம் பரிசீலனை செய்ய முடியும்.

இந்த முறைமை தற்போது நடுவர்களை வாய்ப்பாக அமைந்து விட்டதாக, வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த வங்கதேச மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடுவர் 12 முறை தீர்ப்பினை வழங்கியும் அதில் 4 மட்டுமே சரியான முடிவாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நடுவராக பணியாற்றிய இந்தியாவின் எஸ்.ரவியே இவ்வாறு பிழையான முடிவை வழங்கியிருந்தார்.

இந்தநிலையில் ஒரு வீரர் அட்டமிழப்பிற்கு பயன்படுத்தப்படும் இந்த முறையானது அணிக்கு 2 தான் வழங்கப்படும் நிலையில் அது நடுவர்களின் தவறால் கிடைத்த வாய்ப்பு கைநழுவும் போது அந்த அணிக்கு அநீதி விளைவிக்கப்படும் என்பதே தற்போது சமூகவலைதங்களில் ரசிகர்களின் கேள்வியாக அமைந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments