அந்தரத்தில் பறந்து ஒற்றை கையில் கேட்ச்! மைதானத்தை அதிர வைத்த சங்ககாரா

Report Print Basu in கிரிக்கெட்

பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் பிரீமியர் லீக் போட்டியில் இலங்கை நட்சத்திரம் சங்ககாரா அந்தரத்தில் பறந்து ஒற்றை கையில் அசத்தல் கேட்ச் பிடித்து மைதானத்தை அதிர வைத்தார்.

ஷார்ஜாவில் நடைபெற்று பிளே ஆப் சுற்றின் இரண்டாம் போட்டியில் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான் இஸ்லாமபாத அணியும், சங்ககாரா தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணியும் மோதின.

இதில், கராச்சி கிங்ஸ் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

போட்டியின் போது கராச்சி கிங்ஸ் பந்துவீச்சாளர் மொஹமட் அமீர் வீசிய பந்தை இஸ்லாமாபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவைன் சுமித் சந்திக்க, பந்து மட்டையில் பட்டு நேராக விக்கெட் கீப்பர் சங்ககாராவுக்கு அருகே சென்றது.

அப்போது, சங்ககாரா அந்தரத்தில் பறந்து ஒற்றை கையில் பந்தை அருமையாக கேட்ச் பிடித்து அசத்தினார். குறித்த கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments