கோஹ்லியும் ஒரு மனிதர் தானே? பிரபல கிரிக்கெட் வீரர் ஆதங்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் மூன்று வித போட்டிகளுக்கு தலைவரான கோஹ்லியும் ஒரு மனிதன் தான் அவருக்கும் தோல்விகள் வரத்தான் செய்யும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தற்போது அவுஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

அதுமட்டுமின்றி அப்போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் கோஹ்லியின் ஆட்டம் சிறப்பாக இல்லை. இதனால் கோஹ்லி பல்வேறு விமர்ச்சனங்களுக்கு உள்ளாகினார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி கோஹ்லிக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்திய அணியின் தலைவர் கோஹ்லி இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக செயல்படவில்லை, அவரும் ஒரு மனிதன் தான், அவருக்கும் தோல்விகள் வரும் என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த இந்திய அணி, அதிலிருந்து மீண்டு வந்து அவுஸ்திரேலியாவை வீழ்த்தும் என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக கடந்த டெஸ்ட் தொடரில், அடுத்தடுத்து நான்கு சதங்களை விராத் விளாசியது அசாதாரமானது. நான் பார்த்த வீரர்களில் சச்சினை மிஞ்சும் அளவிற்கு அவுஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது விராட்கோஹ்லி தான் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments