இலங்கை ஜாம்பவான்களின் சாதனையை உடைத்தெறிந்த நியூசிலாந்து வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், மார்டின் கப்டில் இலங்கை வீரர்களின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நேற்று முன்தினம் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயித்த 280 ஓட்டங்களை நியூசிலாந்து அணி அசால்ட்டாக எட்டிப்பிடித்தது.

இதில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த துவக்க வீரர் மார்டி கப்டில் 180 ஓட்டங்கள் குவித்து மைதானத்தில் வானவேடிக்கை நிகழ்த்தினார். இதில் 15 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்நிலையில் மார்டின் கப்டில் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குமார் சங்ககாரா, ஜெயவர்த்தனே மற்றும் திலகரத்னே தில்சன் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

குமார் சங்ககாரா ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 169 ஓட்டங்களையும், ஜெயவர்த்தனே 144 ஓட்டங்களையும் மற்றும் திலகரத்னே தில்சன் 161 (நாட் அவுட்) ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

தற்போது அதை நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் 180 ஓட்டங்கள் குவித்து, இந்த மூவரின் சாதனைகளையும் முறியடித்துள்ளார்.

மேலும் கப்டில் இன்னும் 10 ஓட்டங்கள் மட்டும் அதிகபட்சமாக எடுத்திருந்தால், சனத் ஜெயசூர்யாவின் சாதனையையும் முறியடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments