ஆவேசமடைந்த சங்ககாரா: 82 ஓட்டங்களுக்குள் சுருட்டி அசத்தல்

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிரிமியர் லீக் போட்டியில் சங்ககாரா தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் PSL பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பிளே ஆப் சுற்றின் இரண்டாம் போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றுள்ளது. இதில் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான் இஸ்லாமபாத அணியும், சங்ககாரா தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கராச்சி கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்கள் உட்பட அடுத்தடுத்து வரும் வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கராச்சி கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

கராச்சி கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக சொயிப் மாலிக் மற்றும் பாபர் அசான் 25 ஓட்டங்கள் எடுத்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சங்ககாரா மற்றும் கெய்ல் 17 ஓட்டங்கள் எடுத்து ரசிகர்களை ஏமாற்றினர்.

இதில் சங்ககாரா 17 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்த போது, மிகுந்த கோபத்துடனே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இஸ்லாமபாத் அணி சார்பில் ருமன் ராயில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இஸ்லாமபாத் அணி வீரர்கள், கராச்சி கிங்ஸ் அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினர்.இதில் 8 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை கூட தாண்டவில்லை.

இதனால் இஸ்லாம பாத் அணி 15.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 82 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கராச்சி கிங்ஸ் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இஸ்லாமபாத் அணி சார்பில் அதிகபட்சமாக அசீப் அலி 39 ஓட்டங்கள் எடுத்தார். கராச்சி கிங்ஸ் அணி சார்பில் மொகமத் அமீர், இமாத் வாசிம் மற்றும் உஷ்மா மிர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments