ஏஞ்சலா மேத்யூஸ் நாடு திரும்ப காரணம் இதுதான்

Report Print Amirah in கிரிக்கெட்

காயமடைந்த அணித் தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ் இன்று இரவு தென் ஆப்ரிக்காவிலிருந்து இலங்கைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான சர்வதேச இரண்டாவது டி 20 நேற்று ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது, இதன்போது மேத்யூஸின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவா நாடு திரும்புவதாக சில ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றது.

இருந்த போதிலும் அவர் தனிப்பட்ட காரணத்திற்காக நாடு திரும்பியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் இருபதுக்கு 20 போட்டியில் தினேஸ் சந்திமால் இலங்கை அணியின் தலைவராக செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுடனான அடுத்த இருபதுக்கு 20 போட்டி நாளை மறுதினம் கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.

மேத்யூஸை நாடு திரும்ப வைத்த முதல் குழந்தை!

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ் நாடு திரும்பவுள்ளமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

ஏஞ்சலா மேத்யூஸிற்கு முதல் குழந்தை பிறந்துள்ளதாலேயே அவருக்கு நாடு திரும்ப அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை குறிப்பிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா சுற்றுலா தொடரில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே அவர் நாடு திரும்பியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments