ஆயிரம் ஓட்டங்களை கடந்த நான்காவது இலங்கையர்

Report Print Amirah in கிரிக்கெட்

ஆயிரம் ஓட்டங்களை கடந்த நான்காவது இலங்கையர் என்ற பெருமையை இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இவர் ஜொகனர்ஸ் பேர்க்கில் இடம்பெற்ற இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியிலே இந்த சாதனையை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென் ஆபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி, அந்த அணி 19.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த இலங்கை அணிக்கு 19.3 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அணித்தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ், போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.

இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியில் இரு அணிகளும் சமநிலை பெற்றுள்ளன.

அத்தோடு இலங்கை அணி இந்த ஆண்டில் முதல் வெற்றியை சுவீகரித்துக்கொண்டது

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments