தலையை தாக்கிய பந்து.. சுருண்டு விழுந்த பாகிஸ்தான் வீரர்! அதிர்ச்சி வீடியோ

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

பாகிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் தொடக்க வீரர் அசார் அலியின் (205) இரட்டை சதத்தால் 9 விக்கெட்டுக்கு 443 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதன் பிறகு அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. அப்போது ஷாட் லெக்கில் அசார் அலி களத்தடுப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில் 109வது ஓவரை யாசிர் ஷா வீசினார். அப்போது ஷாட் லெக் பக்கம் ஒரு பந்தை மாத்யூ வாடே ஓங்கி அடிக்க அது அசார் அலி தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டை பலமாக தாக்கியது.

இதனால் நிலைகுலைந்த அசார் அலி அப்படியே மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

இதனால் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த இரு அணி வீரர்களும் அவருக்கு முதலுதவி அளித்தனர். இதனால் சிறிது நேரம் மைதானத்தில் பதற்றம் நிலவியது.

நேற்றைய 4வது நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 465 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. வார்னர் 144 ஓட்டங்கள் எடுத்தார்.

அணித்தலைவர் ஸ்மித் 100 ஓட்டங்களும், மிட்செல் ஸ்டார்க் 7 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments