பாகிஸ்தான் அணிக்கு இந்த அசிங்கம் தேவையா? ஏளனமாய் சிரித்த அவுஸ்திரேலிய வீரர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

டெஸ்ட் போட்டியின் போது மோசமான டிஆர்எஸ் ரிவீவ் கேட்ட முதல் அணி எது என்று கேட்டால் அது பாகிஸ்தான் அணியாகத்தான் இருக்கும்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 443 ஓட்டங்கள் எடுத்தது, அடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 465 ஓட்டங்கள் எடுத்தது.

இதில் மூன்றாம் நாள் ஆட்டத்தை விளையாட துவங்கிய அவுஸ்திரேலியா அணிக்கு வார்னர் மற்றும் ரென்சாவ் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

அப்போது வார்னருக்கு பந்து வீசிய முகமது அமீர் பந்து பேட்டில் பட்டு சென்றதாக அம்பயரிடம் டி.ஆர்.எஸ் ரிவீவ் கேட்டார்.

ரிவீவில் பேட்டுக்கும் பந்துக்கும் இடையே அரை அடி பெரிய இடைவேளியில் பந்து சென்றது தெரியவந்தது. பாகிஸ்தானின் இந்த ரிவீவ் மிகவும் மோசமான ரிவீவாக கிரிக்கெட் வரலாற்றில் அமைந்துள்ளது.

இதைக் கண்ட அவுஸ்திரேலியா வீரர் வார்னர் கண் தெரியாதா என்று செய்கை செய்வது போல் பாகிஸ்தான் வீரர்களை கண்டு ஏளனமாக சிரித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments