வரலாற்றை மாற்றி அமைப்போம்: கர்ஜிக்கும் இலங்கை வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான சுரங்கா லக்மல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைப்போம் என்று கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ஓட்டங்கள் குவித்து ஆடி வருகிறது.

இரண்டு இன்னிங்ஸ் ஓட்டங்களையும் சேர்த்து தென் ஆப்பிரிக்கா அணி 432 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் முதல் டெஸ்ட் போட்டியில் எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும், அதை விரட்டி பிடித்து வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ளது. அவர்கள் 500 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தாலும் அதை எளிதில் எட்டி விடலாம்.

கிரிக்கெட் அரங்கில் இதுவரை எந்த ஒரு அணியும் டெஸ்ட் போட்டிகளில் 418 ஓட்டங்களுக்கு மேல் இலக்கை எட்டிப் பிடித்ததில்லை.

இதைத் தாங்கள் செய்வோம், அந்த சாதனையை தாங்கள் உடைப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் முதல் இரண்டு நாட்கள் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகாமாக இருந்ததாகவும், தற்போது மைதானத்தின் தன்மை மாறியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

500 ஓட்டங்களை விரட்டிப் பிடிப்பது கடினம் தான், இருப்பினும் இரண்டு துடுப்பாட்டக்காரர்கள் நிலைத்து நின்று விட்டால் எளிதில் இலக்கை விரட்டி பிடித்து விடலாம் என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அணி கடந்த 2006 ஆம் ஆண்டு P. Sara Oval மைதானத்தில் இதே தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது 352 ஓட்டங்களை விரட்டி பிடித்ததே அதிகபட்ச ஓட்டமாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments