இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: டோனிக்கு வந்த நெருக்கடி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
679Shares

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 4-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் அடுத்த மாதம் ஒருநாள் மற்றும் டி20 தொடர் போட்டிகள் தொடங்குகிறது. இந்த தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் அணித்தலைவர் டோனி உள்ளார்.

மேலும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இது டோனிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

3வது டெஸ்ட் போட்டியின் போது முகமது ஷமிக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது. சிறிய காயம் என நினைக்கப்பட்ட போது, காயம் பெரிய அளவில் இருந்ததால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

இவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா அல்லது ஆஷிஸ் நெஹ்ரா அணியில் இடம்பெறலாம் என்று தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments