டி20 போட்டியில் 497 ஓட்டங்கள் குவித்து இமாலய சாதனை: வெளுத்து வாங்கிய ஜெயவர்த்தனே!

Report Print Santhan in கிரிக்கெட்
1173Shares

நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் டி 20 போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் Otago அணியும், Central Districts அணியும் மோதின.

இப்போட்டியில் முதலில் ஆடிய Otago அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 249 ஓட்டங்கள் குவித்தது.

அடுத்தாடிய Central Districts அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 248 ஓட்டங்கள் குவித்து 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதில் Central Districts அணிக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே வானவேடிக்கை நிகழ்த்தினார்.

இதில் இரண்டு அணிகளின் ஓட்டங்களையும் சேர்த்துப் பார்க்கையில் 497 ஓட்டங்கள் வருகிறது.

தன் மூலம்கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய போது, இந்திய அணி 244 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவு அணி 245 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

இந்த இரண்டு அணிகளின் எண்ணிக்கையை சேர்த்த போது 489 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

தற்போது அந்த முன்னாள் சாதனையான 489 ஓட்டங்களை Otago மற்றும் Central Districts அணியினர் முறியடித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments