இந்த ஆண்டின் சிறந்த நடுவர் இவர் தான்

Report Print Amirah in கிரிக்கெட்
296Shares

ஐ.சி.சி யின் 2016 ஆண்டிற்கான சிறந்த நடுவருக்கான விருதை மாரிஸ் எராஸ்மஸை பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர் சிறந்த நடுவருக்கான கிரிக்கட் சம்மேளனத்தின் விருதைப்பெறும் 5வது நடுவராவார்.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த மாரிஸ் எராஸ்மஸ் (52), கடந்த 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கென்யா – கனடா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் மூலம் அறிமுகமானவர்.

இவர் சுமார் 10ஆண்டுகள் நடுவராக இருந்து வருகின்றார்.

போட்டி நடுவர்கள் மற்றும் டெஸ்ட் கிரிக்கட் அணிகளின் தலைவர்களின் வாக்குகளின் அடிப்படையிலேயே இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை 2012ஆம் ஆண்டு இலங்கையின் குமார் தர்மசேன பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2016ஆம் ஆண்டுக்கான கனவான் தன்மைக்கான உயர் விருது பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக்குக்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே இந்த விருது 2013இல் இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனவுக்கும் 2011 இல் இந்தியாவின் மஹேந்திரசிங் டோனிக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments