ஒரு ஓட்டத்தில் இரட்டை சதத்தை தவறவிட்ட ராகுல்: கோஹ்லி என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இவ்விரு அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ஓட்டங்கள் குவித்தது.

அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 391 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இதில் துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் 199 ஓட்டங்கள் குவித்து 1 ஓட்டத்தில் இரட்டை சதத்தை தவறவிட்டார். இது அவருக்கு மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.


இந்நிலையில் 199 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்த போது ராகுல் மைதானத்தை விட்டு மிகுந்த வருத்தமுடன் வெளியேறினார். ராகுல் இரட்டை சதம் விளாசுவார், அவருக்கு பாராட்டைத் தெரிவிக்கலாம் என்று இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி வீரர்கள் அறையில் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தார். இதனிடையே ராகுல் அவுட் ஆனவுடன் செய்வதறியாமால், வாயை மூடி வருத்தப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

கோஹ்லி மட்டுமின்றி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் உணர்ச்சிவசப்பட்டு கத்தி அதன் பின்னர் ராகுல் அவுட்டானவுடன் வருத்ததுடன் தலையை கிழே குனிந்த செயல் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments