இங்கே சதமடித்தது யார்? விராட் கோஹ்லியின் கொண்டாட்டத்தை பாருங்க!

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ஓட்டங்கள் சேர்த்தது.

இந்நிலையில் 2வது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் இந்திய மண்ணில் முதன்முறையாக தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

அவர் சதத்திற்கான ஓட்டத்தை அடித்த போது மறுமுனையில் இருந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது கையை தூக்கிய படி ஓடி வந்து சதத்தை கொண்டாடினார்.

தொடர்ந்து விளையாடிய ராகுல் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments