இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ஓட்டங்கள் சேர்த்தது.
இதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ஓட்டங்கள் சேர்த்தது. தொடக்க வீரர்களான லோகேஷ் 30 ஓட்டங்களுடனும், பார்த்தீவ் படேல் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய பார்த்தீவ் படேல் 71 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
புஜாரா 16 ஓட்டங்களிலும், அணித்தலைவர் விராட் கோஹ்லி 15 ஓட்டங்களிலும் நடையை கட்டினர்.
மறுமுனையில் நிதானமாக ஆடிய லோகேஷ் ராகுல் இந்திய மண்ணில் முதல் சதத்தை பதிவு செய்தார். இது அவரது 4வது சதமாகும். தொடர்ந்து அசத்திய ராகுல் இரட்டை சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் ராகுல் 199 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அடில் ரஷூட் பந்தில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.
இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 391 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
முரளி விஜய் 17 ஓட்டங்களுடனும், கருண் நாயர் 71 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.