ஆயிரம் ஓட்டங்கள் குவித்த சாதனை வீரர் சிறையில் அடைப்பு! ஏன் தெரியுமா?

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

ஒரே போட்டியில் ஆயிரம் ஓட்டங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்த பிரனாவ் தானவாடேவை கைது செய்து மும்பை பொலிஸ் அவமானப்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மும்பையை அடுத்த கல்யாணில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர்) பிரனவ் தனவாடே 1,009 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இதன் மூலம் அவர் கிரிக்கெட் வரலாற்றில் 116 ஆண்டு கால சாதனையை தகர்த்து எறிந்து வரலாறு படைத்தார்.

தற்போது இந்த சாதனை வீரருக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது மும்பை பொலிஸ்.

மும்பை கல்யாண் பகுதியில் உள்ள சுபாஷ் மைதானத்தில் தான் கடந்த 12 ஆண்டுகளாக பிரனவ் தானவாடே கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர், கல்யாண் பகுதிக்கு வரவுள்ளார். அதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்க முடிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் மைதானத்தில் ஹெலிபேட் அமைக்க தானவாடே மற்றும் அவரது நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

ஹெலிபேட் அமைக்கும் இடத்தை மாற்றுமாறு பிரனவ் தானவாடே மாநகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால் பிரனவ் தானவாடே உள்ளிட்ட வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பொலிசார் வரவழைக்கப்பட்டு அவர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து கோபமடைந்த பொலிசார் பிரனவ் தானவாடேவின் காலரை பிடித்து தர தரவென இழுந்து சென்று சிறையில் அடைத்துள்ளனர்.

இதன் பின்னர் அந்த பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் அவரை விடுவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்பிறகே பிரனவ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரனவின் கைதுக்கு அவரது பயிற்சியாளரான மொபின் ஷேக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments