வர்தா புயலால் ஆடுகளத்தில் மாற்றமா? உமேஷ் யாதவ் சொல்வது என்ன?

Report Print Amirah in கிரிக்கெட்

சென்னை சேப்பாக்க மைதானத்தின் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பந்து வீசுவது கடினமாக உள்ளது என வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மைதானத்தின் ஆடுகளம் வர்தா புயலால் பாதிக்கப்படவில்லை என தமிழக கிரிக்கெட் சங்கம் அறிவித்த போதும் இதன் தன்மையை புரிந்து கொண்டு பந்துவீசுவது கடினமாக உள்ளதாக உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறியதாவது,

சென்னை சேப்பாக்க மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு பந்து வீசுவது மிகவும் கடினமாக உள்ளது.

பந்து டர்ன் ஆகவே இல்லை, இது கொஞ்சம் மாறுபட்டதாக இருந்தது, இங்கிலாந்து வீரர்கள் விரைவாக ஓடி சில ரன்களை எடுத்தனர்.

ஆனால், பந்து அதிக அளவில் டர்ன் ஆகவில்லை என்று நான் நினைக்கிறேன். இந்த பிரச்சினையால்தான் எங்களால் விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியவில்லை.

இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

மூன்றாவது நாளுக்குப் பின் ஆடுகளம் நன்றாக திரும்பினால் எஞ்சிய நாட்கள் ஆட்டத்தில் சில சுவராஸ்யம் இருக்கலாம் என்றார்.

இஷாந்த் சர்மாவுக்கும் இதே சிக்கல் இருந்தது. ஒரு சிரேஷ்ட வீரர் பந்து வீசும் போது, ஆடுகளத்தின் தன்மையை விரைவாக கணித்துவிடுவார். ஆனால் இஷாந்த் சர்மாவாலும் இதை கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இரு அணிகள் மோதும் முக்கியத்துவம் இல்லாத ஐந்தாவது டெஸ்ட் போட்டி, சென்னையில் நடக்கிறது.

இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 477 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்து 417 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இதில் முதல் நாளில், இந்திய பந்துவீச்சாளர்கயால் நான்கு விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

இரண்டாவது நாளில் 6 விக்கெட் சாய்த்தனர். ஆனால் நட்சத்திர வீரர் அஷ்வினால் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. உலக அளவில் சாதித்த அஷ்வினுக்கு சொந்த மண் சோகமாக அமைந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments