மற்றொரு மேத்யூஸ் ரெடி! 5 பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரள வைத்த இலங்கை சிறுவன்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இலங்கையில் 13 வயதுக்குபட்டோருக்கான பள்ளி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் மித்ரா தெனுவரா என்ற சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மித்ரா தெனுவரா என்ற சிறுவன் களுத்துறை, திசா சென்ரல் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவரது சகலதுறை ஆட்டத்தை பார்த்து இலங்கை அணிக்கு மற்றொரு மேத்யூஸ் கிடைத்துவிட்டார் என்று அனைவரும் வாயார பாராட்டி வருகின்றனர்.

3 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்திய மித்ரா, துடுப்பாட்டத்தில் 111 ஓட்டங்களையும் குவித்தார்.

களுத்துறை வித்தியாலயா அணிக்கு எதிரான போட்டியில் இவரது செயல்பாட்டை பார்த்து அனைவரும் வியந்து போயினர்.

அந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் அவர் 5 பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரள வைத்தார்.

அதுமட்டுமல்லாது 2 இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அவர் 77 ஓட்டங்களையும் குவித்தார்.

இவர் 13 வயதுக்குபட்டோருக்கான திசா சென்ரல் அணியின் தலைவராக உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments