தற்போதைய சூழலில் இந்தியாவின் வீராட் கோஹ்லி தான் தலைசிறந்த வீரர் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது, குறிப்பாக கோஹ்லி தலைமையிலான அணி இதுவரையிலும் எந்தவொரு டெஸ்ட் தொடரையும் இழந்ததில்லை.
2016ம் ஆண்டில் இரட்டை சதமடித்த வீரர்கள் வரிசையில் கோஹ்லி இணைந்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில், மைக்கேல் கிளார்க்கிடம் உங்கள் சாதனையை கோஹ்லி முறியடிப்பாரா(2012ம் ஆண்டு ஒரே ஆண்டில் நான்கு சதங்களை அடித்தவர்) என கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த கிளார்க், எனக்கு நம்பிக்கை உள்ளது, கோஹ்லி ஆட்டத்தை ரசிக்கிறேன் என பதிலளித்துள்ளார்.
மேலும் உலகில் தலைசிறந்த வீரர் கோஹ்லி எனவும் தெரிவித்துள்ளார்.