புதிய வரலாறு படைக்குமா கோஹ்லி அன் கோ?

Report Print Amirah in கிரிக்கெட்

இந்திய அணி 2015 ஆகஸ்டில் இருந்து மும்பை டெஸ்ட் வரை தொடர்ச்சியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி காணாமல் (13 வெற்றி, 4 சமநிலை) முந்தைய சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளது.

கடந்த 1985 செப்டம்பரில் இருந்து 1987 மார்ச் வரை தொடர்ச்சியாக 17 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி காணாமல் (4 வெற்றி, 13 சமநிலை) சாதனை படைத்திருந்தது.

சென்னையில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால், கோஹ்லி தலைமையிலான அணி இந்த சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைக்கும்.

தற்போது சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளையும், வெளிநாட்டு தொடர்களில் இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி முந்தைய சாதனையை சமன் செய்துள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களில் வென்று முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இந்த போட்டியில் அஷ்வின் 7வது முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் 10+ விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இந்திய பந்துவீச்சாளர்களில் அனில் கும்ப்ளே 8 முறை இந்த சாதனையை நிகழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

சொந்த ஊரான சென்னையில் நடக்கும் 5வது டெஸ்டிலும் அஷ்வின் 10 விக்கெட் கைப்பற்றினால் கும்ப்ளே சாதனையை சமன் செய்யலாம்

24வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தும் சாதனையை நிகழ்த்திய அஷ்வின், முன்னாள் கேப்டன் கபில்தேவை (23) முந்தியதுடன் இந்திய பவுலர்களில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கும்ப்ளே (35), ஹர்பஜன் (25) முதல் 2 இடங்களில் உள்ளனர்.

அஷ்வின் 167 ரன்னுக்கு 12 விக்கெட் வீழ்த்தியது வாங்கடே ஸ்டேடியத்தில் இந்திய பவுலரின் சிறந்த செயல்பாடாக அமைந்தது. முன்னதாக, இங்கிலாந்தின் இயான் போதம் 1980ல் 13 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments