அஞ்சலோ மெத்தியூஸின் எதிர்பார்ப்பு சாத்தியமாகுமா..?

Report Print Vethu Vethu in கிரிக்கெட்

தென்னாபிரிக்காவுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் தான் அதிகமான ஓவர்களை வீசுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி போர்ட் எலிசெபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த டெஸ்ட் போட்டிகளில் தாம் அதிகமாக பந்து வீசாத நிலையில், வேகபந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற தென்னாபிரிக்காவில் அதிகமான ஓவர்களை வீசி அணிக்காக அதிக விக்கட்டுக்களை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பந்துவீசிய மெத்தியூஸ் உபாதைகளுக்கு உள்ளாகி இருந்தார்.

இதன்காரணமாக அண்மையில் நடைபெற்ற பல கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. இலங்கையின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் அஞ்சலோ மெத்தியூஸ் மாத்திரமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments