டோனி ஓய்வு எப்போது? சச்சினின் பளார் பதில்!

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் ஒரு நாள் அணித்தலைவரான டோனி தற்போது போட்டிகள் இல்லாத காரணத்தினால் ஓய்வில் இருப்பதால் தமது குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட்டு வருவார்.

இந்நிலையில் டோனி கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு பெற போகிறார், அவருக்கு வயது அதிகமாகிக் கொண்டே செல்கிறது, வரும் உலகக்கோப்பை போட்டி வரை தாக்குப்பிடிப்பாரா, இந்திய அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்விகள் பலரிடையே எழுந்து வருகிறது.

தற்போது இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில், இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான சச்சின், டோனியின் ஒய்வு கூறித்து பேசியுள்ளார். அதில் கிரிக்கெட் விளையாடுவதற்கு வயது ஒன்றும் தடையில்லை, அப்படிப்பார்த்தால் தமது 38 வயதில் தான் இரட்டை சதம் அடித்தேன் என்றும், அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் தமது 44 வயதிலும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தி வருகிறார்.

இதனால் விளையாடுவதற்கு வயது ஒரு பிரச்சனை இல்லை எனவும் உடற்தகுதியும், மனதைரியமும் மட்டும் இருந்தால் போதும் என கூறியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாகவே டோனியின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவர் ஒரு சிறந்த வீரர், எந்த ஒரு முடிவு எடுப்பதிலும் சிறப்பாக செயல்படுபவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அணியின் டெஸ்ட் அணித் தலைவராக கோஹ்லி சிறப்பாக செயல்படுகிறார். அதே போன்று ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் டோனி அணித் தலைவராக பதவி வகிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments