இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்: இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

இதுவரை நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து இரண்டில் தோல்வியை தழுவியது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நாளை மும்பையில் தொடங்குகிறது.

இதில் இந்திய அணியில் இருந்து ரஹானே, முகமது சமி ஆகியோர் காயம் காரமணாக நீக்கப்பட்டுள்ளனர். ரஹானேவுக்கு கை விரலிலும், முகமது சமிக்கு முழங்காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு பதில் மணிஷ் பாண்டே, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மற்றபடி இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments