சங்கக்காரா சொதப்பினாலும் ரஸல் விளாசலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டாக்கா அணி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

வங்கதேச பிரிமியர் லீக் டி20 தொடரில் டாக்கா டைனமிட்சஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

வங்கதேச பிரிமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடந்த முதல் தகுதிப் போட்டியில் டாக்கா டைனமிட்சஸ்- குல்னா டைட்டன்ஸ் அணிகள் மோதியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய டாக்கா அணி ஜுனைட் கான் பந்துவீச்சில் திணற ஆரம்பித்தது. இதனால் வரிசையாக அனைவரும் ஆட்டமிழந்தனர்.

கடைசி நேரத்தில் ரஸல் 25 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்சர்கள் என 46 ஓட்டங்கள் சேர்த்தார். இதனால் அணியின் ஓட்டங்கள் சற்று உயர்ந்தது.

சங்கக்காரா 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பிராவோ ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்கள் குவிக்க, டாக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் சேர்த்தது.

குல்னா அணி சார்பில், ஜூனைட் கான் 4 விக்கெட்டுகளையும், பிளட்ச்சர் 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து 141 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குல்னா அணி தடுமாற ஆரம்பித்தது.

தொடக்க வீரர் பிளட்ச்சரை (28 ஓட்டங்கள்) தவிர அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 16.2 ஓவரில் அந்த அணி 86 ஓட்டங்களில் சுருண்டது.

இதனால் 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற டாக்கா அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டாக்கா அணி தரப்பில் ரஸல், பிராவோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரஸலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments