எட்டு ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் பட்டேல்

Report Print Amirah in கிரிக்கெட்

நீண்ட காலத்துக்கு பின்னர் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் பார்த்தீவ் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராக பார்த்தீவ் படேல் செயற்படவுள்ளார்.

இந்த தொடரில் ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வரிதிமான் சஹாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மூன்றாம் போட்டியில் விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக பார்த்தீவ் படேல் இணைக்கப்பட்டார். காயத்தில் இருந்து வரிதிமான் சஹா இன்னும் முழுமையாக குணமாகாத நிலையில், பட்டேல் நான்காவது போட்டியிலும் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கெட் காப்பாளரான அவர் இறுதியாக எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி மும்பையில் மொஹாலியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments