சாதனை படைத்த வார்னர்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் அடித்த அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் டேவிட் வார்னர்.

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.

இதில் 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், அவுஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னர் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் 22 போட்டிகளில் விளையாடி 6 சதம், 4 அரைசதம் உட்பட 1232 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இதன்மூலம் ஒரே ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக ரிக்கி பொண்டிங்(இரண்டு முறை 2003, 2007-ம் ஆண்டு), மேத்யூ ஹைடன் (2007) 5 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments