டோனி படையுடன் ஒருநாள் தொடரில் மோதப்போகும் இங்கிலாந்து அணி இதுதான்!

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

தற்போது டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஜனவரி தொடங்குகிறது.

முதல் போட்டி தொடர் ஜனவரி 15ம் திகதி, 2வது போட்டி 19ம் திகதி, 3வது போட்டி 22ம் திகதிகளில் நடக்கிறது.

இதைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி 26ம் திகதி, 2வது போட்டி 29ம் திகதி, 3வது போட்டி பெப்ரவரி 1ம் திகதிகளில் நடக்கிறது.

இந்நிலையில் தற்போது இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து ஒருநாள் அணி

இயன் மோர்கன் (அணித்தலைவர்), ஹால்ஸ், மொயீன் அலி, ஜோ ரூட் பேர்ஸ்டோவ், ஐக்பால் சாம் பில்லிங்கிஸ், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், டவ்சன், புளுகெட், அதில் ரஷித், ஜேசன்ராய், டேவிட் வில்லி, கிறிஸ்வோக்ஸ்.

இங்கிலாந்து டி20 அணி

இயன் மோர்கன் (அணித்தலைவர்), ஜோ ரூட், மொயீன் அலி, ஜோஸ் பட்லர், ஹால்ஸ், ஐக்பால், சாம் பில்லிங்ஸ்,

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments