ஷேவாக் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் ஜெயலலிதாவுக்கு இரங்கல்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விளையாட்டு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நேற்று சிகிச்சை பலனிக்காமல் காலமானார்.

இதைத் தொடர்ந்து உடல் அவரது சொந்த வீடானா போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது.

தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடலானது ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பொதுமக்கள், தொண்டர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் விளையாட்டு பிரபலங்களும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments