அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் போட்டியில் களமிறங்கிய சந்திமால்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத் தலைவரான சந்திமால் அறுவைசிகிச்சைக்கு பிறகு உள்ளூர் போட்டியில் களமிறங்கி தனது உடல்தகுதியை நிரூபித்துள்ளார்.

கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சந்திமாலுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த கிளப் போட்டியில் சந்திமால் களமிறங்கியுள்ளார்.

பிளோம்பீல்ட் அணிக்கு எதிரான போட்டியில் என்.சி.சி அணிக்காக ஆடிய அவர் அணியின் வெற்றிக்கு உதவியாக பெரிய ஓட்டங்களை குவிக்கவில்லை என்றாலும் தனது உடல்தகுதியை நிரூபித்தார்.

அவர் முதல் இன்னிங்சில் 3 ஓட்டங்களும், 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களும் எடுத்தார்.

இந்தப் போட்டியில் சந்திமால் விளையாடிய என்.சி.சி அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments