இலங்கையை வீழ்த்த வியூகம்: அவுஸ்திரேலிய அணியில் மைக் ஹசி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை- அவுஸ்திரேலிய அணிகள் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தப் போட்டிகள் பெப்ரவரி 17,19 மற்றும் 22 ஆகிய திகதிகளில் நடக்கிறது.

அதேசமயம் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் பெப்ரவரி 23ல் தொடங்குகிறது.

இந்நிலையில் தலைமை பயிற்சியாளரான டேரன் லெக்மன் இந்தியாவில் இருப்பதால், டி20 அணிக்கு தனியாக பயிற்சியாளர் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக மைக் ஹசி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments