சங்கக்காரா அதிரடி காட்டியும் தோல்வியை தழுவிய டாக்கா அணி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

வங்கதேச பிரிமியர் லீக் டி20 போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் குல்னா டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வங்கதேச பிரிமியர் லீக் டி20 போட்டியில் நேற்று நடந்த 42வது லீக் போட்டியில் டாக்கா டைனமிட்சஸ்- குல்னா டைட்டன்ஸ் அணிகள் மோதியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய டாக்கா அணி குமார் சங்கக்காராவின் அதிரடியால் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் குவித்தது.

குமார் சங்கக்காரா அதிகபட்சமாக 41 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் குவித்தார். குல்னா அணி தரப்பில் ஜூனைட் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய குல்னா அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ஆண்ட்ரீ பிளட்ச்சர் (9) ஏமாற்றினார்.

மற்றொரு தொடக்க வீரரான ஹசானுசமன் சிறப்பாக விளையாடி 40 ஓட்டங்கள் சேர்த்தார். அடுத்து வந்த அப்தூல் மசீட்தும் (21) நிலைக்கவில்லை.

ஆனால் அணித்தலைவர் மஹமதுல்லா அதிரடி காட்டி அரைசதம் விளாசினார். அவர் 28 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சர் என 50 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் வந்த பென்னி ஹொவல் 26 ஓட்டங்கள் சேர்க்க, குல்னா டைட்டன்ஸ் அணி 18 ஓவரிலே 4 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடத்தில் இருக்கும் இவ்விரு அணிகளின் வெற்றி தோல்வி எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை.

இந்நிலையில் நாளை நடக்கும் முதல் தகுதிப்போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டாக்கா அணி, 2வது இடத்தில் இருக்கும் குல்னா அணியை சந்திக்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments