கோபக்கார கோஹ்லியின் பொறுமையை அதிகமாக சோதித்தது இவர்கள் தான்!

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
746Shares

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான அணித்தலைவர் குக் மற்றும் ஹமீது ஆகியோர் தங்களின் பொறுமையை அதிகமாக சோதித்துவிட்டனர் என்று விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டிணம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 405 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குக் மற்றும் ஹமீது தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை ஆட்டமிழக்க இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.

ஒரு வழியாக 4வது நாள் ஆட்டத்தில் இருவரும் ஆட்டமிழக்க, கடைசி நாளான இன்று தொடர்ந்து விளையாடிய அந்த அணி 158 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இது தொடர்பாக கோஹ்லி கூறுகையில், தொடக்க வீரர்கள் எங்கள் பொறுமையை அதிகமாக சோதித்து விட்டனர்.

அவர்கள் தடுப்பாட்டம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருப்பார்கள் என்று நினைத்தோம்.

இதுவரை மேற்கொள்ளாத பல்வேறு முயற்சிகளை செய்தோம். அவர்கள் ஆட்டமிழந்த போது தான் எங்களுக்கு நம்பிக்கை வந்தது.

கடைசி நேரத்தில் புஜாரா ஒரு யோசனை சொன்னார். அதற்கு தான் பலன் கிடைத்தது என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments