இது ஒரு நல்ல கேள்வி: நிருபரின் கிடுக்குப்பிடி கேள்விக்கு கூலாக பதிலளித்த மலிங்கா

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
421Shares

இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான மலிங்கா நிருபர் ஒருவரின் கிடுக்குப்பிடி கேள்விக்கு அசத்தலாக பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கிரிக்கெட் வீரர் மலிங்கா பல்வேறு விடயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது நிருபர் ஒருவர், கிரிக்கெட் வீரராக இருப்பது எளிதான விடயமா என்று மலிங்காவிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மலிங்கா, இது எளிதான விடயம் தான். ஆனால் அணிக்குள் நுழைவது என்பது தான் கடினமான விடயம் என்றார்.

உடனே சிறந்த வீரராக இருக்க அணிக்குள் நுழைந்து விட்டால் மட்டும் போதுமா? என்று நிருபர் கிடுக்குப்பிடி கேள்வி கேட்டார்.

உடனே சுதாரித்து கொண்ட மலிங்கா சிரித்துக் கொண்டே, இது ஒரு நல்ல கேள்வி. ஆனால் நான் இப்போது அணியில் இருப்பதால் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது.

ஆனால் ஒரு விடயம் உங்களிடம் சொல்லியாக வேண்டும். இலங்கை அணிக்குள் நுழைந்தாலும் அதை தக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் கடினம். அதற்கு நீங்கள் மிகவும் சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று பதிலளித்தார்.

மேலும், அவர் பேசுகையில், நான் எப்போதும் மீடியாவிடம் என்னுடைய பொய்யான முகத்தை காட்ட மாட்டேன். எப்போதும் நான் ஒரே மாதிரியாக தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments