தொல்லை கொடுத்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை ஷமி வீழ்த்தியது இப்படி தான்!

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
621Shares

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடந்தது.

இதில் நேற்றைய 4வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இந்தியா 405 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்திய அணிக்கு ஆரம்பத்தில் நெருக்கடி கொடுத்த தொடக்க வீரர்கள் குக் (54), ஹமீட் (25) ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த ஜோ ரூட் தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.

இந்நிலையில் அவர் 25 ஓட்டங்கள் எடுத்திருந்த போது முகமது ஷமி வீசிய ரிப்பர் பந்தில் நிலைகுலைந்தார். அந்த பந்தை சமாளிக்க முடியாமல் எல்பிடபிள்யூ ஆக ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் வந்தவர்கள் சுழலில் தடுமாற இந்திய அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments